வியாழன், 12 மார்ச், 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சி-->பெண்களுக்கு தாலி அவசியமா?

பெண்களுக்கு தாலி அவசியமா?

பெண்களுக்கு தாலி அவசியமா
உனக்கு இது அவசியமா
உன் தாயை பற்றி பேசுவது
என் பேச்சு சுதந்திரமா
இதுவா தமிழர் பண்பாடு
கேட்க முடியுமா உன்னால்
புர்கா அவசியமா என்று
உன் சுதந்திரத்தை சோதிக்க
எங்களின் நம்பிக்கையென்ன
உன் மைதானமா
எங்களில் குழப்பத்தை உருவாக்குவதற்கா
புதிய தலைமுறை
எங்களை கிள்ளி ரசிப்பதா உன் சுதந்திரம் 
உணர்ச்சியை கொள்ளவா உன்னுடய நிகழ்ச்சி
ஒரு தகப்பன் என்பதை மாற்றும் முயற்சி 
பலரின் மனதை புண்படுத்தும்
உன் சுதந்திரம் பறிக்கப் படுவதில் தவறாென்றுமில்லை.
<---பாலா-->

புதன், 11 மார்ச், 2015

இறைவா

இறைவா,
    உன்னில் ஓர் அணு நான்
    என் முன்னே நான் காணும் யாவும்
    உன்னில் சிறு அங்கமென அறிகிறேன்
    மகிழ்விப்பதும், வருத்துவதும், உணவாவதும்
    எனக்காக வருந்துவதும்
    உனது அங்கமென உணர்கிறேன்
    உன்மேல் எழும் கோபம் யாவும்
    உன்னுடையது எதை நீ இழந்தாய்
    கேள்வியோடு முடிவதை ஏற்றுக் கொள்கிறேன்
    உன் முழு உருவத்தை காணும் ஆவலில் கேட்கிறேன்
    உன்னில் ஓர் அணு நானா இல்ல
    நான் வாழும் பூலோகமா....
<--பாலா-->